image
குழு / 07 February, 2022

"தோல் வெடிப்பை நீக்கும் ஆவாரம் பூ"

"ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு அரைத்து குளித்துவந்தால் உடலில் நமைச்சல், துர்நாற்றம் ஆகியவை நீங்கும். ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் போல் குடித்து வந்தால் உடல் குளுமை பெறும். ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் ஆக்கி குடித்து வரும் பொழுது நாவறட்சி நீங்கும் மற்றும் கண் எரிச்சல் நீங்கும். ஆவாரம்பூவை உலர்த்தி பொடி செய்து நீர் விட்டு அரைத்து குழப்பி புருவத்தின் மீது பூசி வர உடல் சூட்டினால் கண் சிவந்து போவது சரியாகும். ஆவாரம் பூவின் பொடியோடு காலையிலும் மாலையிலும் பசுநெய் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். ஆவாரம் பூவின் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வர தேகம் பொன்னிறமாகும். மேக வெட்டை சரியாகும். உடலில் உப்புப் பூத்தல் சரியாகும். நல்லெண்ணெயுடன் ஆவாரம் பட்டை, சாம்பிராணி, ஒரு மிளகாய், கஸ்தூரி மஞ் சள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி தலை முழுகி வர மதுமேகம் உள்ளவர்களுக்கு எரிச்சல் குணமாகும். தோல் வெடிப்பு நீங்கும். பெரும்பாடு, சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் போன்ற பிரச்சனைக்கு சு00 கிராம் ஆவாரம் பட்டையை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து சு00 மில்லி வரை சுண்டக்காய்ச்சி காலையிலும் மாலையிலும் 50 மில்லி வரை குடித்து வர சரியாகும். நீரிழிவு நோய்களுக்கு ஆவாரம் பூ மற்றும் செடி ஆகியவை சிறந்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். அவர்களுக்கு வரும் பாத எரிச்சல், சிறுநீரக கோளாறு, மூட்டுவலி ஆகியவை சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. ஆவாரம் பூவையும் கொழுந்தையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் காய்ச்சி பால் சேர்த்து குடித்துவர சர்க்கரை நோய் கட்டுப்படும். ஆவார ம் பூ க் களை எடுத்து பாசிப்பருப்புடன் சமைத்து உண்டு வர சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். ஆவாரம் பூவுடன் கருப்பட்டி சேர்த்து குடித்துவர ஆண்குறி எரிச்சல் நீங்கும்."

Share
Tweet
Share