image
மருத்துவர் கலைவாணி / 07 February, 2022

புதிய உலகம்

"ஒவ்வொரு நாளும், நாம் வாழும் உலகம் புதுமையினை நம்முள் புகுத்திக் கொண்டே இருக்கின்றது. நாம் வாழும் உலகம் அழகாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் சில நேரங்களில் தெரிவதும், சோகம் நிறைந்த உலகமாக தெரிவதும் நாம் உலகை பார்க்கும் பார்வையில் உள்ளது. ஒவ்வொரு மனிதனின் உலகமும் வேறாகவே உள்ளது. இதை போலவே குழந்தைகளின் உலகமும் அழகாக, கற்றல் நிறைந்ததாக, சந்தோஷம் மட்டுமே நிறைந்த உலகம் தான் அது. வாருங்கள் அந்த புதுமையான உலகிற்கு செல்வோம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு அறிவாற்றலுடன் இருப்பர். ஒரு குழந்தை இசையில் சிறந்து விளங்குவர், மற்றொரு குழந்தை கணிதத்தில் சிறந்து விளங்குவர். இது அவருடைய தனித்திறமைகள் ஆகும். இந்த உலகிற்குள் சென்று உனக்கு ஏன் கணிதம் வரவில்லை, நீ ஏன் இசை பயில மறுக்கிறாய் என்று கேள்விகளை கேட்காதீர்கள். குழந்தை தன்னுடைய ஆர்வத்தினாலும், மு ய ற் சி யி னா லு ம் இ ல க்கை நோக்கி செல்வார்கள். குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்கும் உரிமையை குழந்தைகளுக்கு கொடுங்கள். இந்த உரிமை அவர்கள் வளர்ந்த பிறகு தாங்களாகவே சொந்த காலில் நிற்க உதவி புரியும். குழந்தைகள் தானாகவே ஒரு விஷயத்தை செய்யும்போது மிகுந்த மனநிறைவையும், பெருமிதத்தையும் கொள்வர். இது ஒரு அழகிய உணர்வு தானே. தினமும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தால் குழந்தையின் தீர்மானம் எடுக்கும் திறமை அதிகரிக்கும். அவர்களுக்குள் தன்னம்பிக்கை ஒளியானது வீசும். இது அவர்களின் உலகில் பெற்றோர்கள் ஆகிய நீங்கள் கற்க வேண்டிய விஷயம் ஆகும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சமூகத்தின் பிற நபர்களிடம் உணர்வு பூர்வமான உறவை உருவாக்கி கொள்ள கற்றுக் கொடுங்கள். எல்லோரிடமும் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். அன்பை பொழிய கற்றுக் கொடுங்கள். அன்பு என்பது இல்லையென்றால் நாமும் இயந்திரம் போலத்தான் என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து சொல்லுங்கள். அன்பை வெளிப்படுத்த எந்த விதத் தடையும் கிடையாது தானே. சிறு குழந்தை பருவத்தில் இருந்து அதிக அன்பும், அரவணைப்பு கிடைக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் நிதானமாகவும், சரியாகவும் நடந்து கொள்கிறார்கள். வாழ்க்கைத்துணை, குழந்தைகளுடன் ஆத்மார்த்தமான அன்பு கொண்டு வாழ்கின்றனர் என்பது ஆய்வின் முடிவும். உங்கள் பிள்ளைகளை பாராட்டுங்கள். சி றி ய பா ரா ட் டு க் க ள் அ தி க சந்தோஷத்தையும், ஊக்கத்தையும் தரும். ஆனால் அதிக பாராட்டும், எதிர்மறையான விளைவினை உண்டாக்கும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக புகழும்பொழுது, உங்கள் புகழ்ச்சிக்காக மட்டுமே அவர்கள் செயல்களை செய்வார்களே தவிர, செய்யும் செயலில் கவனம் உண்டாகாது. பராட்டிற்கு அடிமையாகி விட்டால் பொய் கூட சொல்ல தயங்க மாட்டார்கள். சில நேரங்களில் பெற்றோரும் பொய்யான பாராட்டுகளை தெரிவிப்பதுண்டு. ஆர்வத்தோடு செய்தித்தாள் படித்துக் கொண்டு இருக்கும்போது, பிள்ளை தான் வரைந்த ஓவியத்தை காட்டும்பொழுது அதை பார்க்காமலே நன்றாக உள்ளது என்று கூறுவது பொய்யான பாராட்டு தானே. இந்த பாராட்டை பிள்ளைகள் உணர்ந்து கொள்வார்கள். இச்செயலை மறந்தும் கூட செய்து விடாதீர்கள். பெற்றோருடன் இருக்கும்பொழுது குழந்தைகளின் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அது அவர்களுக்கு ஒருவிதப் பாதுகாப்பு உணர்வையும் இதமான மனநிலையையும் தரும். நீங்கள் அருகில் இருந்தால் யானை பலம் அவர்களுக்கு. அதிகப் பணம் சேர்ப்பவரை விட வலுவான உறவை உருவாக்கி கொள்பவரே மிகவும் சந்தோஷமானவர்கள் என்பது ஆய்வின் முடிவு. இதனை பெற்றோர் முதலில் புரிந்து கொள்வதே இல்லை. பணம் என்பது இவ்வுலகில் வாழ தேவையான ஒன்றுதான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கையாக மாறிவிடாது. சின்னச் சின்ன உணர்வுகள், வாழ்க்கையினை அழகாக மாற்றும் தருணங்கள் என்பதை மறக்காதீர்கள். கொஞ்சம் பணம் இருந்தால் நன்றாக இருக்குமே... கார் இருந்தால் நன்றாக இருக்குமே.. . பெரிய வீடு இருந்தால் மேலும் நல்லது என்று ஓட்டம் பிடித்துக் கொண்டே இருந்தால் பிள்ளைகளுடன் எப்பொழுது தா ன்பே சு வீ ர் க ள் ? இதன் விளைவாக மனித உறவுகளுக்குப் பதிலாக பணம் பொருட்கள் மீது மட்டுமே ஆசைத் தோன்றும். அன்பை தந்தால் மட்டும் தான் அன்பு என்ற பயிர் முளைக்கும். இல்லையேல் விளைவு ஆபத்தானது தான். உங்கள் உறவை பலப்படுத்த சில யோசனைகள்...  குழந்தைகளுடன் விளையாடுங்கள்.  குழந்தைசெய்யும் குறும்பு தணங்களை இரசிக்க பாருங்கள்.  குழந்தைகள் ஆர்வமுடன் செய்யும் செயலில் அவர்களுடன் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்.  சமையலில் அவர்களின் பங்கும் இருக்கட்டும். ஒவ்வொரு செயலிலும் உங்கள் உறவு அழகாகவே மலரும். குழந்தைகள் அவர்களது உலகில் நடைபோட கற்றல் மிகவும் அவசியம் ஆகும். கற்றலின் ஓர் அங்கம் தான் தவறு செய்வது. நீங்கள் எந்த தவறுகளும் செய்யவில்லையென்றால் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். எனவே குழந்தைகள் தவறு செய்தால் திட்டவோ அடிக்கவோ செய்யாதீர்கள். அவர்களுடைய உலகில் அவர்கள் ஒன்றை ஆராயும்போது அதற்கு தடைபோடாதீர்கள். குழந்தைகள் ஆர்வமாக சொல்லும்போது அது சிறு பிள்ளைத்தனமாக உங்களுக்கு தோன்றலாம். அதற்கு காரணம் நீங்கள் சில வருடங்களுக்கு முன்பாகவே பிறந்ததுதான். அதனால் அந்த அனுபவ அறிவை உங்களிடமே வைத்து விட்டு அவர்கள் கூறுவதை மட்டும் கேளுங்கள். குழந்தைகள் அவர்களுடைய மூளையின் வளர்ச்சிக்கு ஏற்ப விஷயங்களை புரிந்து கொண்டு கேள்விகளை கேட்பர். அவர்களுடைய புரிதலை அதிகப்படுத்தி மூளையை துரிதமாக வளர வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையதுதான். குழந்தைகள் ஏதாவது சொன்னால் இது கூடத் தெரியாதா உனக்கு என்று சொல்லாதீர்கள். அப்படி செல்லும்பொழுது நமக்கு ஒன்றுமே தெரியவில்லை போல என்று குழந்தை குற்ற உணர்ச்சியில் வேதனைப்படும். நியாயமான சந்தேகத்தை கூட கேட்காமல் இருந்தி விடுவார்கள். கற்றுக் கொள்ளும் ஆர்வமே போய்விடும் அவர்களுக்கு. குழந்தைகளுக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அது தொடர்பாக போதுமான அறிமுகம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். எனவே அந்த நேரங்களில் திட்டுவதற்கு பதிலாக என்னவெல்லம் புரிந்துள்ளது என்றும், எதுவெல்லாம் புரியவில்லை என்று பாருங்கள். அவர்களுக்கு புரியாததை புரியவைக்க உதவுங்கள். குழந்தைகளின் உலகில் அவர்களை மகிழ்விக்க நீங்கள் கற்றுத் தர வேண்டிய விஷயங்கள்:  கதை புத்தகம் படிக்க வையுங்கள்.  உங்களுடன் சேர்ந்து சமைக்க அவர்களை பழக்குங்கள்.  புதிர்களை போட கற்றுக் கொடுங்கள்.  இசை கருவியின் இசையில் மகிழ பாருங்கள்.  அருங்காட்சியகம், பொருட்காட்சி, மிருக காட்சி சாலைகள் என புதிய இடங்களுக்கு அவர்களை பழக்குங்கள்.  கதைகளையோ, கவிதைகளையோ எழுத ஆர்வத்தை தூண்டுங்கள்.  தோட்டக் கலையில் ஈடுபட வையுங்கள்.  கைவினை பொருட்கள் தயாரித்தல், ஓவியம் வரைதல் போன்றவற்றை கற்றுக் கொடுங்கள்.  இயற்கையினை இரசிக்க கற்றுக் கொடுங்கள். உங்கள் மழலை செல்வங்களோடு புதிய உலகிற்குள் செல்ல தயாராகுங்கள். பயணம் இனிமை நிறைந்ததாக அமையட்டும்."

Share
Tweet
Share