image
எழில் பரிதி / 07 February, 2022

அதிக புரதம் ஆபத்து

"புரதச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிற பரப்புரை அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. என்னதான் புரதம் உடல் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்தாலும், உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியதாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அது ஆபத்து என்பதை புரிந்து கொள்ளூங்கள். உடலில் நீருக்குப் பிறகு அதிகம் இருப்பது புரத சத்துதான். புரதச் சத்தே உடலை வளர்க்கிறது. உடலில் ஏற்படும் தேய்மானங்களை சீர் செய்கின்றது. முடி, சருமம், கண், தசை, உறுப்புகள் இவை அனைத்தும் புரதத்தாலேயே உருவானவை. ஆகவே வளரும் குழந்தைகளுக்கு அதிக அளவில் புரதம் கொடுக்க வேண்டும். ஒருவரின் வயதுக்கும் உடல் எடைக்கும் எடுத்துக் கொள்ள வேண்டிய புரத்தத்தின் அளவுக்கும் சம்பந்தம் இருக்கிறது 60 கிலோ எடை கொண்ட ஒருவர் ஒருநாளைக்கு 48 கிராம் புரதம் எடுத்துக் கொள்ளலாம். அதைவிட அதிகமாக புரதம் எடுத்துக்கொண்டால் அது தொல்லையாக மாறும். முக்கியமாக சிறுநீரகம் பாதிக்கப்படும். உ ட ல் ஆே ரா க் கி ய மா க இருப்பவர்களுக்கு அதிக புரதம் உட்கொள்வது சிறுநீரக பிரச்சனைகளை உருவாக்கும். முன்னதாகவே சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் புரதத்தின் அளவை உணவில் கூட்டும் போது சிறுநீரகத்தில் கல், செயல் இழப்பு போன்றவை ஏற்படும். ஆகையால் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று புரதம் உட்கொள்வது நல்லது. பால், இறைச்சி, முட்டை, மீன் மற்றும் பீன்ஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றில் அமினோ அமிலங்களாக பிரிக்கப்பட்டு, சிறு குடலினால் உறிஞ்சப்பட, கல்லீரல் தனக்குத் தேவையான அமினோ அமிலங்களைப் பிரித்து எடுத்துக்கொள்கின்றது. மீதமுள்ளவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்ற சிறுநீரகம் ஓவர்டைம் பார்க்கவேண்டி வருகிறது. அதிகமாக உழைத்து களைக்கிறது. பாதிப்படைகிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆர்டிக் ஆராய்ச்சியாளர் வில்ஜல்முர் ஸ்டீபன்சன் வெறும் இறைச்சியை மட்டும் தன் உணவாகக் கொண்டு ஐந்து ஆண்டுகளை கழித்தார். இறைச்சி மட்டும் சாப்பிடுவதனால் மனிதர்கள் உயிர் வாழ முடியாது என்று வாதிட்டவர்களின் கூற்றை ஸ்டீபன்ஸ்சன் பொய் என்று நிரூபிக்க விரும்பினார். அதன்பிற்கு பு5 ஆண்டுகள் அதிக புரதச்சத்து கொண்ட அமெரிக்க உணவுப் பழக்கத்தை பின்பற்றினார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் புரதத்தினால் ஏற்பட்ட விஷம் என்ற சொல்லாடலை உருவாக்கியதுடன் அதற்கு, பட்டினியில் இருக்கும் முயல் என்ற பட்டப்பெயரும் வைத்தார். பிறகு புரதத்தின் அளவைக் குறைத்து மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தின் அளவை அதிகரித்தபோது அவரது நோய்க்கான அறிக்குறிகள் மறைந்தன. இன்றைக்கு பல்பொருள் அங்காடியின் அலமாரிகளில் புரதச்சத்து நிறைந்த பொருட்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. புரத உணவை அதிகமாக சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகரித்துவிடும் எ ன் ற த ப் பா ன க ற் பி த் த லா ல் பணத்தை வீணாக்குகிறோம். உடலை பாழாக்குகிறோம். புரதம் அதிக அளவில் எடுத்துக் கொள்பவர்களின் இறப்பு விகிதம் 74 சதவீதம் அதிகரிப்பதாகவும், நான்குமடங்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் புரதம் உடலுக்கு தேவை என்பதையும் மறந்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு புரதம் எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு கார்போஹைட்ரேட் உணவும் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரும் அதிகமாக குடிக்க வேண்டும். புரத உணவு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் சுண்ணாம்புச் சத்தின் இழப்பு அதிகமாக இருக்கும். எனவே அதை ஈடுசெய்யும் அளவுக்கு சுண்ணாம்பு சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் எலும்புப் புரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். புரத உணவை அதிகமாக எடுத்தால் கார்போஹைட்ரேட் அளவு குறைந்து செரட்டோன் உற்பத்தி குறையும். இதனால் கோபம், மனஉளைச்சல் தோன்ற வாய்ப்புள்ளது. எனவே அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள். அசைவம், பால், முட்டையில் இருந்து உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கிறது.. தாவர உணவுகளில் கொட்டை, விதை, பழங்கள், பருப்புகள் அனைத்தையும் கலந்து உண்ண வேண்டும். உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு இவற்றில் குறைந்த அளவே புரதம் உள்ளது. புரதச் சத்துக் குறைந்தால் உடல் எந்த அளவு பாதிக்கப்படுமோ அதைவிட அதிகமாக புரதச்சத்து அதிகரித்தல் பாதிப்பை ஏற்படுத்தும். முட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது, நன்றாக உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முட்டை சாப்பிடலாம். 100 கிராம் முட்டையில் பு3 கிராம் புரதம் இருக்கிறது. சிக்கன் போன்ற அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. சிக்கனை எண்ணெயில் பொறித்து சாப்பிடக்கூடாது. ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்படாத நல்ல நாட்டுக்கோழியை வாரம் 300 - 500 கிராம் அளவுக்கு நீராவியில் வேகவைத்து, மசாலா தடவாமல் சாப்பிடலாம். சிக்கன் சாலட் செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் கோழி இறைச்சியில் 27 கிராம் புரதம் உள்ளது. துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். 100 கிராம் பச்சைப் பயிறில் மட்டும் சு4 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது. பால் பொருட்களில் 10 கிராம் அளவுக்கு புரதம் உள்ளது.யோகர்ட் எனப்படும் தயிர், சீஸ் போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனினும் இதில் கொழுப்பு சத்தும் நிறைந்து காணப்படுவதால், அளவகா உண்ண வேண்டும். பு ர த ச் ச த் து குறை பா டு கொண்டவர்களுக்கு சோயா சிறந்த உணவு. சோயாவை சீரான இடைவெளி விட்டு சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் சோயாவில் சு8.6 கிராம் புரதம் உள்ளது. யாருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்ப உங்கள் உணவை வடிவமைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு தினம் 10 கிராம் புரதம் தேவை. பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு சு0 கிராம் புரதம் தேவை. விடலை பருவ ஆண் பிள்ளைகளுக்கு 5சு கிராம் தேவை. பருவ பெண்களுக்கு 46 கிராம் தேவை. வளர்ந்த ஆணுக்கு சுமார் 50 கிராம் புரதமும், வளர்ந்த பெண்ணுக்கு சுமார் 45 கிராம் புரதமும் தேவை. கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் வழக்கத்தைவிட அதிகமாக புரத உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்."

Share
Tweet
Share