image
ஹிரண்மயி / 07 February, 2022

உடல் ஆரோக்கியத்தில் கணையத்தின் பங்கு

"நம்முடைய வயிற்றில், இரைப்பைக்குக் கீழே, சிறுகுடலுக்கு இடது பக்கத்தில், ஊதாவும் மஞ்சளும் கலந்த நிறத்தில், மாவிலை வடிவத்தில் தட்டையாக இருக்கும் உறுப்புதான் கணையம். சுமார் சு0 செ.மீ நீளமும் பு00 கிராம் எடையும் கொண்டிருக்கும். கணையத்தில் நாளமுள்ள சுரப்பிகளும் நாளமில்லா சுரப்பிகளும் உள்ளன. நாளமுள்ள சுரப்பிகள், என்சைம்கள் அடங்கிய உணவுச் செரிமான நீர்களைச் சுரக்கின்றன. நாளமில்லா சுரப்பிகள் இன்சுலினை சு ர க் கி ற து . நாளமுள்ள சுரப்பிகள் சுரக்கும் செரிமான நீர்கள் ‘கணைய நாளம்’ வழியாக முன்சிறுகுடலுக்குச் சென்று, கொழுப்பு, புரதம், மாவுப்பொருள் ஆகிய உணவுச்சத்துகள் செரிப்பதற்கு உதவுகின்றன. நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் இன்சுலின் இரத்தத்தில் கலந்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்கின்றன. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்யும் உடல் உறுப்பு கணையம் மட்டும்தான். காக்காக்ஸி, மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு, ருபெல்லா முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று கணையத்தை நேரடியாகத் தாக்கும்போது, பீட்டா செல்கள் முழுவதுமாக அழிந்துபோவதால், இன்சுலின் சுரப்பு அறவே இல்லாமல் போய்விடும். குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக நிகழும். இதனால் சிலருக்கு டைப் பு சர்க்கரை நோய் வருகிறது. பலருக்கு உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, பரம்பரை போன்ற காரணங்களால் டைப் சு சர்க்கரை நோய் வருகிறது. இன்சுலின் குறைந்த அளவில் சுரப்பதாலும் அல்லது சுரக்கின்ற இன்சுலின் சரிவர வேலை செய்யாமல் இருப்பதாலும் டைப் சு சர்க்கரை நோய் வருகிறது. கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் முறையாக வெளியேறாமல் கணையத்தில் தேங்கினால் அது கணையத்தை செயலிழக்கச் செய்யும் அளவுக்கு மோசமான விளைவு ஏற்படும். கணைய வீக்கம், அழுகுதல், இரத்தப்போக்கு ஏற்படும். இந்த நிலையை கணைய அழற்சி என்கிறோம். அ ள வு க் கு அ தி க மா க ம து அருந்துபவர்களுக்குக் கணையக்குழாயில் ஒருவகை புரதப்பொருள் படிந்து நாளடைவில் அந்தக் குழாயை அடைத்துவிடும். அப்போது கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் அங்கேயே தங்கி, கணையத்தின் செல்களை அழித்துவிடும். இதனால் கணைய அழற்சி’ ஏற்படும். இது பெரும்பாலும் ஆண்களுக்கே வருகிறது. 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. பித்தப்பையில் கற்கள் உருவாகி பித்தக்குழாயை அடைத்துவிடுமானால், பித்தநீர் மற்றும் கணைய நீர்கள் மு ன் சி று கு ட லு க் கு ள் நுழை ய முடியாமல், மீண்டும் கணையத்திற்கே திரும்பிவிடும். அதன் விளைவாக இந்த நீர்கள் கணையத்தின் செல்களை அரித்துவிடுவதால், கணையத்தில் அழற்சி தோன்றும். அ டி க் க டி ம ர வ ள் ளி க் கி ழ ங் கு சாப்பிடுபவர்களுக்கு அதில் உள்ள ‘கிளைக்கோசைட்’ எனும் வேதிப்பொருள் கா ர ண மா க கை ண ய அ ழ ற் சி ஏற்படுவதுண்டு. அசத்தியோபைரின், தயசைடு, சோடியம் வால்பிரவேட் போன்ற மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அவற்றின் பின்விளைவாக கணைய அழற்சி ஏற்படலாம். சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்துவிடும். இதனாலும் கணையம் பாதிக்கப்படலாம். பரம்பரைக் கோளாறுகள், புற்றுநோய், ரத்த ஓட்டக் குறைபாடுகள், விஷக்கடிகள் மற்றும் ஒவ்வாமை போன்றவற்றாலும் கணையம் பாதிக்கப்படலாம். கணையம் பாதிக்கப்பட்ட நபருக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். இந்த வலி மேல் வயிற்றில் ஆரம்பித்து முதுகுப் பக்கத்துக்குப் பரவும். சிலருக்குத் தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம். முன்பக்கமாக சாய்ந்து உட்கார்ந்தால் வலி சிறிது குறையும். படுத்தால் வலி அதிகரிக்கும். குமட்டல், வாந்தி இருக்கும். வயிறு உப்பும். இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கும் இதே போன்றுதான் வயிற்றுவலி இருக்கும். ஆனால், வாந்தி எடுத்த பின்னர் வயிற்று வலி குறைந்துவிடும். கணைய அழற்சி உள்ளவர்களுக்கு வாந்தி எடுத்தாலும் வயிற்றுவலி குறையாது. கணைய அழற்சியை கவனிக்காமல் விட்டால் மஞ்சள் காமாலை ஏற்படும். வயிற்றில் நீர் கோர்த்து வயிறு உப்பும். ரத்த வாந்தி வரும். மலத்தில் ரத்தம் போகும். இறுதியில் ‘கோமா’ எனும் ஆழ்நிலை மயக்கத்துக்கு உள்ளாவார்கள். கணைய அழற்சியை ஆரம் ப நிலையிலேயே கவனித்து விட்டால் மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். கணையம் அழுகி விட்டாலோ அல்லது அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு விட்டாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும். அதிக மது மற்றும் புகைப்பழக்கம் காரணமாக கணையத்தில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு. கணைய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 சதவிகிதம் பேர்தான் நோய் தாக்கிய பின்பு 5 ஆண்டுகள் வரை உயிரோடு இருந்திருக்கிறார்கள். என்பது வருத்தமான உண்மை. பருமனாக இருப்பவர்களுக்கு இன்சுலின் தேவை அதிகரிக்கிறது. கணையம் நிறைய இன்சுலினை சுரந்து நாளடைவில் களைத்துவிடுகிறது. இதன் விளைவாக, கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போகிறது. இதன் காரணமாக இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. எனவே உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருங்கள். மது அருந்துவது, புகைப்பழக்கத்தை அறவே தவிர்ப்பது, பித்தப்பையில் கற்கள் உருவானால் அதற்கு முறையான சிகிச்சை எடுப்பது, குழந்தைகளுக்கு மஞ் சள் காமாலை, ரூபெல்லா நோய்களுக்கு தடுப்பூசி போடுவது, தந்தூரி என்ற பெயரில் நெருப்பில் சுட்டு தரப்படும் உணவுகளை தவிர்ப்பது, தரமற்ற எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுபடி பயன்படுத்தாமல் தவிர்ப்பது, கொழுப்பு மிகுந்த உணவுகளை குறைத்துக் கொள்வது, சைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன்மூலம் கணையம் பாதிப்படையாமல் காப்பாற்ற முடியும். கணையத்தை பாதுகாக்க முக்கியமாக கவனிக்க வேண்டியவை: உண்ட உணவு செரிப்பதற்கான என்சைம்களை கணையம் சுரக்கிறது. இதை ஆல்கஹால் தடுத்துவிடுகிறது. இதனால், கணையத்தில் சுரக்கப்படும் என்சைம்கள் கணையத்திலேயே தங்கி, அதன் செல்களைப் பாதிக்கிறது. மது அருந்துவதால் அதிக அளவில் கணைய அழற்சி ஏற்படும். ஆல்கஹால் கணையத்துக்கு அரக்கன் என்பதை உணர வேண்டும். சிகரெட் புகைப்பதால் நுரையீரல் மட்டுமல்ல, கணையமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கணையத்தில் உற்பத்தியாகும் என்சைம் சிறுகுடலுக்குச் சென்றபிறகுதான், செயல்திறன் பெறும். ஆனால், புகைப் பழக்கமானது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, என்சைம்களை கணையத்தில் இருக்கும்போதே செயல்படத் தூண்டி, பா தி ப்பை ஏ ற் ப டு த் து ம் . புகை கணையத்துக்குப் பகை. அதிக உடல் எடை, உடல் பருமன் கணைய பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கு ம் . உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யும்போது, உடல் உறுப்பு, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் நுண்ஊட்டச்சத்துக்கள் சென்று சேருவது எளிதாகும். இதனால், உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகச் செயல்படும். ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பதால், கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, கொழுப்பு குறைந்த உணவுகள், கொழுப்பு இல்லாத கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடலாம். ரெட் மீட் எனப்படும் ஆடு, மாடு போன்ற இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட, மைதா, சர்க்கரை போன்ற அதிகம் சுத்தகரிக்கப்பட்ட, நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட் போலவே, புரதச்சத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒருநாளைக்குத் தேவையான அளவு மட்டுமே புரதச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகப் புரதத்தை எடுத்துக்கொள்ளும்போது, அதைச் செரிப்பதற்கு, கணையம் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. விலங்குக் கொழுப்பு, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்த காய்கறி, முழுதானியம், தேன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பயோஆக்டிவ் பொருள், கணையத்தில் எவ்வித கட்டிகளும், காயங்களும் ஏற்படாமல் நல்ல பாதுகாப்பு தரும். எனவே முடிந்த வரையில் அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள். சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வரோட்ரோல் என்னும் பொருள், ப் ரீ ரா டி க் க ல் க ளா ல் கணைய செல்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும். பசலைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற கணையத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் சு-3 முறை பசலைக்கீரையை உட்கொண்டு, கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். தயிர் சாப்பிட்டால், கணையத்தில் ே நா ய் த்தொ ற் று க ள் ஏ ற் ப டு வ து தடுக்கப்படும். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும். தயிரை சாப்பிடும்போது அ த னு ட ன் ச ர் க் கை ரே ச ர் த் து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்."

Share
Tweet
Share