image
சுருணிமகன் / 05 February, 2022

"எதைச் சாப்பிட வேண்டும்?

"நாள்தோறும் மூன்று வேளைகளிலும் உணவு சாப்பிடுகிறீர்கள். அவசர அவசரமாக அள்ளிக் கொட்டிக் கொள்கிறீர்கள். இடையிடையே நொறுக்குத் தீனிகளை முடிந்த வரை ஒரு கை பார்க்கிறீர்கள். நீங்கள் சாப்பிட்ட உணவுகள் எல்லாமே செரிமானம் ஆகிவிடுமா? என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படுவதில்லை. அதைப் பற்றி நீங்கள் நினைப்பதுமில்லை. வெந்ததைத் திண்போம். விதி வந்தால் சாவோம் என்ற ரீதியில் வயிற்றுக்குள் சோற்றையும், ஒத்துக் கொள்ளாத இதர உணவுகளையும் கொட்டிக் கொண்டால் போதுமா? உடல் நலத்துடன் வாழவேண்டும், பிணிகள் எதுவும் நம்மை பிணைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் கவலைப் பட வேண்டாமா? இப்படி நாம் மின்னல் வேகத்தில் சாப்பிட்ட உணவு அத்தனையும் செரிமானமாவதில்லை. செரித்த உணவும் நம் உடலை விட்டு வெளியேறவுமில்லை. இந்தக் கழிவுப் பொருட்கள் அத்தனையும் வயிற்றுப் பகுதியில் கூடாரமிட்டுக் கனஜோராகப் படுத்து உறங்கிவிடும். அப்புறம் மலச்சிக்கல் வராமலிருக்குமா? கட்டாயம் வரும். இந்தக் கழிவுக் கதாநாயகர்களை யார் எழுப்பி விடுவது? இந்த கழிவுகளெல்லாம் நச்சுக்களாக மாறிப் பல நோய்களை உற்பத்தி செய்துவிடும். கேன்சர் போன்ற நோய்களே தலைதூக்க ஆரம்பிக்கும். வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் உடலில் நிரந்தரமாகத் தங்கிவிடும்போது உங்களுக்கு நெஞ்செரிச்சல், ஏப்பத்தின்போது கெட்டவாடை வீசுவதல், வாய்வு சேர்தல் மலம் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள், வயிறு உப்புதல், உடலின் எடை கூடுதல், சோர்வு போன்ற பிரச்சினைகள் உருவாகும். இந்தக் கழிவுகள் சேர்வதற்கு காரணம் என்ன? இன்றைய உணவு முறைகள் தான்! காலையில் சுலபமாக சிறுநீர், மலம் வெளியேறினால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வயிற்றிலே தங்கிவிட்ட இந்த கழிவுகளை எப்படி வெளியேற்றுவது?  இரண்டு நாட்களுக்கு மேல் மலம் கழிக்காமல் இருந்தால் தேவையில்லாத காற்று நிரப்பி தொப்பையை வரவழைக்கும். எனவே நாள்தோறும் எழுந்த உடனே ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். உடலிலுள்ள கழிவுகள் சுலபமாக வெளியேறும்.  காபி, தேநீர் அருந்தும் பழக்கமுடையோர் அருந்தலாம்.  இளஞ்சூடான நீரில் அரை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து ஒரு தேக்கரண்டியளவு தேனைச் சேர்த்துக் கலக்கிக் குடிக்கலாம்.  உணவு அருந்து வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெந்நீர் அருந்த வேண்டும்.  சுலபமாக சீரண ம கா க் கூ டி ய பச்சைப் ப ய று , சோயா, பீன்ஸ், நா ர் ச் ச த் து நிறைந்த உணவுப் ெ பா ரு ட் க ள் , ப ழ ச் சா று , காய்கறிகள், பழங்கள் ஆகியவைகளை உணவில் அதிக மாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.  நிறை யே மா ர் குடியுங்கள்.  வாரமொருமுறை வாழைத்தண்டு சாறு அருந்துங்கள்! வாழைத்தண்டுச்சாறு தொப்பையைக் குறைக்கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  காலை நேரத்தில் புரதச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். கொழுப்பு உள்ள உணவு மிகவும் குறைவாகவே இருக்கட்டும்.  இரவில் வாழைப்பழம் சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமுள்ளது. இது மலச்சிக்கலைப் போக்கும்.  படுக்கைக்குச் செல்லும் முன்பு திரிபிலா சூரணத்தை வெந்நீரில் கலந்து குடியுங்கள். (அரை தேக்கரண்டியளவு)  பேரீச்சம்பழம், உலர்ந்த அத்திப்பழம் ஆகியவைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள்.  மதிய உணவில் கட்டாயம் ஒரு கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.  அசைவ உணவுகளை அளவோடு சா ப் பி டு ங் க ள் . சுவை யா க இருக்கிறது என்று சொல்லி ஒரு பிடி பிடிக்காதீர்கள்.  எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை உங்களால் ஒதுக்க முடியாது. குறைந்த அளவில் சாப்பிடுங்கள். இவைகளையெல்லாம் நீங்கள் ஒழுங்காகச் செய்தாலே போதும்! உங்கள் உடம்பில் ஆனந்தமாக பள்ளிக் கொண்டிருக்கும் தேவையற்ற கழிவுகள் எவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்! அப்புறமென்ன உங்களுக்கு ஆனந்தம்தான்! பரம ஆனந்தம்தான்!!"

Share
Tweet
Share