"உணவை ஏன் சமைத்து சாப்பிட வேண்டும்?"
"உணவுப் பொருட்களை வெப்பத்துக்கு உட்படுத்துவதை சமைத்தல் என்கிறோம். உடலுக்குத் தேவைகளை ஊட்டத்தை வழங்குவதில் உணவை சமைக்கும் முறைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. உணவு பார்வைக்கு அழகாகவும், சுவை மிகுந்ததாக இருப்பதற்கும் சமைத்தலின் பங்கு முக்கியமானது. உணவு எளிதாக செரிமானம் ஆகவேண்டும் என்பதே சமைத்தலில் முதன்மையான நோக்கம். காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்கு வகைகள், மீன், முட்டை, இறைச்சி என பலவிதமான உணவுகளை நாம் உட்கொள்கிறோம். பழங்கள், சில காய்கறிகள் மற்றும் கொட்டைகளைப் பச்சையாக உண்ணலாம். ஆனால் பெரும்பாலான உணவுகள், சமைத்த பின்னரே விரும்பத்தக்க மாற்றங்களை அடைகின்றன. உண்பதற்கு ஏதுவானதாக மாறுகின்றன. அதனால்தான் எளிதில் செரிமானமாகும் பழங்கள் காய்கறிகளை பச்சையாகவும், மற்ற உணவுகளை சமைத்தும் உண்கிறோம். ஒவ்வொரு உணவும் தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. பலவகையான உணவுகளை உட்கொள்ளும்போது அதனுடை மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று வேதிவினை புரிந்து ஒவ்வாமை, செரியாமை முதலான பிரச்சனைகள் ஏற்பட வழி வகுக்கிறது. சமைத்து உண்ணும்போது இ ந் த பி ர ச் சை ன க ள் தவிர்க்கப்படுகிறது. உணவை பு00 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துக்கு உட்படுத்தி சமைக்கிறோம். அப்படி சமைக்கும்போது உணவு உண்ணத் தகுந்ததாக, தரமிக்கதாக மாற்றப்படுகிறது. மாமிசங்கள், தானியங்கள், ப ரு ப் பு வை க க ள் , கீரை க ள் , கா ய் கறிகள் சை ம க் க ப் ப டு வ தா ல் மென்மையடைகின்றன. செரிமானம் எளிதாகிறது. மேலும் உணவுபாதையின் சவ்வுகள் பாதிக்கப்படுவதை குறைக்கிறது. உணவை சமைப்பதால் உணவின் தரமும் ருசியும் அதிகமாகிறது. தோற்றம், மணம், தன்மை, ருசி அதிகரிக்கிறது. ஒரே வகை உணவுப் பொருளைக் கொண்டு, பல வகை உணவுகளை தயாரிக்க முடிகிறது. அரியைக் கொண்டு சோறு, அவல், புட்டு, இடியாப்பம், பொங்கல், கஞ்சி, கொழுக்கட்டை என பலவிதமாக உணவுகளை தயாரிக்க முடிகிறது. நீரில் சமைத்தல், நீராவியில் வேகவைத்தல், நெருப்பில் சுடுதல், எண்ணெயில் பொரித்தல் என பலவிதங்களில் நாம் உணவை சமைக்கிறோம். சுடுதல், பொரித்தலைவிட நீரில் சமைப்பதும், ஆவியில் வேகவைப்பதும் சிறந்த முறையாகும். அரிசி, முட்டை, பருப்பு, இறைச்சி, கிழங்குகள் ஆகியவை கொதிக்க வைத்தல் முறையில் சமைக்கப்படுகின்றன. இட்லி, புட்டு, இடியாப்பம் முதலானவை ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுகின்றன. காய்கறிகள், கூட்டுகள் வதக்கல் முறையில் தயார் செய்யப்படுகிறது. அதிரசம், முறுக்கு முதலான தின் பண்டங்கள் பொரித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. எண்ணெயில் பொரிக்கும் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதாலேயே எண்ணெயில் பொரிக்கும் உணவுகளை பண்டிகை காலத்தில் மட்டும் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தோம். இன்றைக்கு அன்றாடம் எண்ணெயில் பொரிக்கும் உணவுகள் சாப்பிட ஆரம்பித்ததன் விளைவாக உடல் பருமன், மாரடைப்பு பிரச்சனைக்கு ஆளாகியுள்ளோம். உணவு சமைக்கப்படுவதால் உணவு உட்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது - சமைத்த உணவு அதன் தன்மையிலும், மணத்திலும் விரும்பத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துவதால், அதிக அளவு உணவை உட்கொள்ள இயலும். சமைப்பதால் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நமக்கு கிடைக்க ஏதுவாகிறது. உணவின் சுவைக்கு ஏற்பவும், குணத்திற்கு ஏற்பவும் சில நறுமணப்பொருள்களை சேர்க்கும் வழக்கம் ஏற்பட்டது. அந்த நறுமண பொருட்கள் உணவிற்கு சுவையை அளிப்பதுடன் எளிதில் ஜீரணமாகவும் உதவுகிறது. சத்துக்களை உடலில் எளிதில் கொண்டுபோய் சேர்க்கிறது, ஒவ்வாமை ஏற்படாமல் காக்கின்றது. வா ய் வு கு ண ம்கொ ண் ட உருளைக்கிழங்குடன் மிளகு சேர்த்து சை ம ப் ப து ம் , சா ம் பா ர் , ர ச ம் வைக்கும்போது பெருங்காயம் சேர்ப்பது, மாமிச உணவுகளுடன் இஞ்சி, பட்டை, பெருஞ்சீரகம் சேர்ப்பது எல்லாம் சுவையை அதிகப்படுத்துவது, செரிமானத்தை எளிதாக்குவது என்கிற நோக்கத்தில்தான். ஏலக்காய், கிராம்பு, பட்டை, மஞ்சள், சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு, வெங்காயம், இஞ்சி, புதினா, கொத்தமல்லி முதலான பொருட்களை உணவின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிடத்தக்க விதத்தில் சேர்ப்பதால் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தன்மையும் சமச்சீராகும். இப்படி சமைக்கப்பட்ட உணவுகள் முத்தோட சமநிலை உணவுகள் என்ற சிறப்பை பெறுகிறது. பதார்த்தகுண சிந்தாமணி பாடல் ஒன்று உணவில் உள்ள தோஷத்தை போக்க அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம், காயம், சுக்கு, ஏலம் வெந்தயம், உள்ளி ஆகிய எட்டுவிதமான பொருட்களை பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறது. ஒன்றிய வாத பித்த கபமியை யுராவண்ணம் நன்று கறிகனெல்லா நாளுமே சமைப்பராய்தோர் தின்று மிளகு மஞ்சள் சீரக முயர்ந்த காயம் வெற்றிகொள்ள சுக்கோடேலம்வெந்தயம் முள்ளி சேர்த்தே! மேற்கண்ட நறுமண பொருள்கள் கார சுவை உடையவை. செரிமானத்தை எளிதாக்குவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக் கும் நுண்கி ரிமிக ளை அழிப்பதோடு. உணவில் உள்ள நஞ்சுத்தன்மையையும் நீக்குகிறது. நெய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சிறந்த உணவு. இனிப்புடன் நெய் சேர்த்து சமைக்கும்போது சிலருக்கு செரிமானக் கோளாறை உருவாக்குகிறது. இனிப்பு கபத்தன்மையை அதிகரிக்கும். இனிப்பு சேர்த்து சமைக்கும் உணவுகளில் ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, குங்குமப்பூ போன்ற நறு மணப்பொருட்களை அந்த உணவில் அதன் சுவைக்கு ஏற்ப சேர்த்தால், கப தன்மை குறையும். முக்கியமாக ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை ஓரளவு கட்டுப்படுத்தும். ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயில் உள்ள நறுமண வேதிப்பொருட்கள் குடல் புண்களை ஆற்றும் சக்தி வாய்ந்தவை. குடல் புழுக்களையும் அழிக்கும் ஆற்றல்கொண்டது. அசைவ உணவுகளில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே அசைவம் சமைக்கும்போது பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் இவற்றை கலந்து சமைப்பது மிகச்சிறந்த முறை. மிளகு சிறந்த கிருமி நாசினி. உணவில் உள்ள நச்சுக்களை நீக்கும் சக்தி மிளகிற்கு உண்டு. பூண்டு, இதயத்திற்கு மிக சிறந்த உணவு. ரத்தத்தில் கொழுப்பை சேரவிடாமல் காக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. பருப்பு, வாழைக்காய், உருளைக்கிழங்கு, சுண்டல் போன்றவற்றை தயா ர் செய்யும்போது மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும். அவை உணவிற்கு தனி ருசியை அளிப்பதுடன், வாதம் அதி கரிப்பதால் உடலில் ஏற்படும் வலியையும் நீக்கும். ரசம் வைக்கும்போது அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு, தனியா, மஞ் சள், பெருங்காயம், கொத்தமல்லிக் கீரை இவைகளை ரசத்தில் சேர்க்கிறோம். ரசம் இரைப்பையில் உள்ள ஜீரண நீரினை சுரக்கச்செய்து செரிமானத்தை எளிதாக்குகிறது. வாத, பித்த, கபத்தை சமநிலைப்படுத்துகிறது. பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை தீர்க்கவல்லது. குழம்பு மற்றும் சாம்பார் வகைகளை தயார் செய்யும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்க்கவேண்டும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. புளிப்பால் உண்டாகும் வாதத்தை குறைக்கும். பித்தத்தை தணிக்கும். நார்ச்சத்து நிறைந்த மருத்துவ உணவு இது. கா ய் க றி ம ற் று ம் கீரை க ள் சமைக்கும்போது அரை தேக்கரண்டி மஞ் சள்தூள் சேர்த்துக் கொள்ளவேண்டும் மஞ் சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு. வலி, வீக்கங்களை குறைக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். உடல் மற்றும் மூளை செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். தொண்டைக்கட்டு, குரல் கம்முதல், தலைவலி, அஜீரணம், பசியின்மை, வயிற்றுப் பொருமல், வாயு தொல்லைகளுக்கு, காரச்சுவை உடைய சுக்கு மற்றும் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெருங்காயம் கசப்பு, காரச்சுவையையும், வெப்பத்தன்மையையும் கொண்டது. உப்பு, காரம், புளிப்புச்சுவை கொண்ட உணவுகளை சமைக்கும்போதும், கிழங்கு வகை உணவுகளை சமைக்கும்போதும் கட்டாயம் பெருங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணம் காரணமாகத் தோன்றும் நெஞ்சுவலி, சாப்பிட உடன் மலம் வரும் உணர்வு, குடல் அழற்சி நோய்களுக்கு பெருங்காயம் மிகச் சிறந்த மருந்து. தொற்று நோய்களை தடுக்கும். பெருங்காயத்தை சிறிது எண்ணெய்யில் பொரித்து உணவில் சேர்க்க வேண்டும். உணவில் காரச் சுவைக்காக மிளகாயை பயன் படுத்துகிறோம். இது வெப்ப வகை உணவு. அதனால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்புண், மூலம் முதலிய நோய்கள் உண்டாகலாம். மிளகாயின் வெப்பத்தை குறைக்க அதற்கு சம அளவு கொத்தமல்லி (தனியா) கலந்து பயன்படுத்தவேண்டும். பச்சைமிளகாயை பயன்படுத்தும்போது, கொத்தமல்லி கீரையை சம அளவு சேர்த்துக் கொள்வது நல்லது."