image
தாராபுரம் சுருணிமகன் / 02 February, 2022

"காலத்திற்கேற்ற உணவுகளைச் சாப்பிடுங்கள்!"

"சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டுமென்று எண்ணாமல், வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டுமென்று பலரும் நினைக்கிறார்கள். பேல்பூரி, பானி பூரி, சில்லி காளான் போன்ற விரைவு உணவுகளைச் சாப்பிட்டு விரைவாகவே உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள். பீட்சா, பர்கர், பப்ஸ், சமோசா, பேக்கரி ஐட்டங்கள் போன்ற உணவுப் பொருட்களை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இவ்வாறில்லாமல் இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவைகளைச் சாப்பிட வேண்டும். இருமல், சளிப்பிரச்சினை போன்றவை ஏற்படும்போது வைட்டமின் ஏ சத்து மிகுந்த சிட்ரஸ் அமிலம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். இவற்றுக்கு நோயை எதிர்க்கும் சக்தி உண்டு. எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை சிட்ரஸ் அமிலம் கொண்ட பழங்களாகும். இவைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் அரை எலுமிச்சம்பழச்சாற்றைப் பிழிந்து ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றிக் கலக்கிக் குடிக்க வேண்டும். இருமல், சளி, பிரச்சினைகள் தீர்வதோடு, திடக்கழிவு, திரவக் கழிவு, வாய்வுக் கழிவு ஆகிய கழிவுகளையெல்லாம் வெளியேற்றும். உணவிற்குப் பின் ஆரஞ்சுப் பழம், சாத்துக்குடி பழம் ஆகியவகைகளை சாப்பிடலாம். பழச்சாறு குடிப்பதற்கு பதிலாகப் பழங்களை அப்படியே சா ப் பி டு ங் க ள் . அ ப்போ து தா ன் அவைகளிலுள்ள நார்சத்து நமது உடலுக்கு அதிகமாகக் கிடைக்கும். பச்சைக்காய்கறிகளைச் சாப்பிடுங்கள். கேரட், முள்ளங்கி போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிடுவது நல்லது. பாலைச் சிலர் ஒதுக்கிறார்கள். பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கால்சியம் அவசியம். சோயா பீன்ஸைச் சாப்பிடுங்கள். பாலும், சோயாவும் உடலுக்குச் சக்தியைத் தருகின்றன. நாட்டுக் கோழி சூப் சாப்பிடுங்கள். இதனால் மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட உதவுகிறது. மீன் வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மத்தி மீன், வஞ்சிரம் ஆகிய மீன்கள் உடம்புக்கு நல்லது. மழைக்காலம் வந்துவிட்டால் சிரமம்தான்! அப்போது இஞ்சி, இலவங்கம், இலவங்கப்பட்டை, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகு, இஞ்சி ஆகியவைகளை விட்டு விடாதீர்கள். கதாநாயகன், கதாநாயகி அவைகள் தான். எல்லாவற்றையும் இயக்கவைக்கும் இயக்குநர் பூண்டுதான். இவைகள் மூலமாக உடம்பை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளலாம். சளி, இருமல் எளிதில் நெருங்காது. காலை, மாலை ஆகிய இரண்டு நேரமும் நெல்லிக்காய் லேகியம் சாப்பிடுங்கள். (ஒரு தேக்கரண்டியளவு). லேகியம் சாப்பிடுவது நல்லது. லேகியம் சாப்பிட்டுப் பால் சாப்பிடுங்கள். உணவுக்குப் பின் லேகியம் சாப்பிடுங்கள். காலையில் உணவுக்கு முன் நெல்லிக்காய்ச்சாறு ஒரு டம்ளர் பருகலாம். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, அக்ரோட் பருப்பு சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும் என்று சிலர் கதையளக்கிறார்கள். இதனால் கொழுப்புச்சத்து குறைய வாய்ப்புண்டு. பாதாம் பருப்பில் கொலஸ்ட்ரால் உள்ளது என்று கூறுகிறார்கள். இது தவறான கருத்து. பாதாம் பருப்பை நீங்கள் எப்படிச் சாப்பிட்டாலும் அவை உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் வைட்டமின் ஈ சத்து உள்ளது. கொழுப்புச்சத்தை நீக்கும் தன்மை கொண்டது. எனவே தாராளமாகப் பாதாம் பருப்பைச் சாப்பிடலாம். சிலர் பத்துப் பருப்புகள் வரை சாப்பிடுகிறார்கள். ஐந்திற்கு மேல் வேண்டியதில்லை. கோடை காலத்தில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிடலாம். கோடையில் சைவ உணவுகளே சிறந்தது. கடல் உணவுகளைச் சாப்பிடலாம். ஏனென்றால் விரைவில் செரிமானமாகிவிடும். பச்சரிசி, நிலக்கடலை, தேங்காய், உருளை, சேப்பங்கிழங்கு, வாழைக்காய், மரவள்ளி ஆகியவைகளைத் தவிர்க்க வேண்டும். அகத்திக்கீரை, தண்டுக்கீரை, முருங்கை, மணத்தக்காளி, டர்னிப், நூல்கோல், முள்ளங்கி, நீர்ப்புசணி, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பீன்ஸ், கத்தரி, வெண்டை, புடலங்காய், பீர்க்கங்காய், தக்காளி, வெள்ளரி, பாகற்காய், வெங்காயம் ஆகியவைகளை நிறையச் சேர்த்துக் கொள்ளலாம். உளுந்து, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, வறுத்த கடலை, புழுங்கல் அரிசி, கோதுமை, ராகி ஆகியவற்றை நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்."

Share
Tweet
Share