image
நவீன் / 01 February, 2022

கல்லீரல் எனும் நண்பன்

"இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு அடுத்த படியாக நாம் நம் உடலில் பாதுகாக்க வேண்டிய உறுப்பு கல்லீரல் ஆகும். கல்லீரலில் தான் பல வேதியியல் வினைகள் நிகழ்கின்றன. இதய துடிப்பின் இயக்கத்திற்கும், இரத்தக் குழாய்களின் பராமரிப்பிற்கும், உண்ணும் உணவு செரிப்பதற்கும், மூளையின் முனைப்பிற்கும், தசையின் வளம் மற்றும் வலிமைக்கு, உடலின் இயக்க வேலைகளுக்கும் கல்லீரல் தான் முக்கிய சக்தியாக உள்ளது. நாம் உண்ணும் உணவு எவ்வகையாக இருந்தாலும் அதில் இருந்து சத்துகள் முதலில் செல்வது கல்லீரலுக்குத் தான். இந்த சத்துக்களை உடலில் இருக்கும் செல்களுக்கு தேவைப்படும் வகையில் மேலும் உடைத்து இரசாயன மாற்றங்கள் நடத்தி இரத்தம் மூலமாக அனுப்பி வைப்பதும் கல்லீரல் தான். கல்லீரல் தான் நம் உடலை காக்கும் காவலர். நரம்புகள் வழியாக உள்ளே செல்லும் குளுக்கோஸ் உடல் இயங்க முக்கியமான எரிப்பொருள் சக்தியாக உள்ளது. இந்த குளுக்கோஸ் அளவு மீறி அதிகமாகும்பொழுது கிளைகோஜன் என்ற பொருளாக மாற்றி சேமிக்கப்படுகிறது. கல்லீரலில் சேமிக்கப்பட்ட கிளைக்கோஜன் அளவு அதிகமானால் மிஞ்சி நிற்கும் குளுக்கோஸை உடலின் பல பாகங்களில் கொழுப்பாக சேர்க்கப்பட்ட கொழுப்பு உணவு உண்ணாத வேளையிலும், நோய் வாய்ப்பட்டு இருக்கும் நிலையிலும் இந்த கொழுப்பு தான் நமக்கு உதவி செய்கின்றது. உடலுக்கு தேவையான புரதம் பயன்படும்பொழுது அம்மோனியாவை உண்டாக்குகிறது. இந்த புரதமே, நரம்புகள் வழியே கல்லீரலை அடைந்து அமோனியா நஞ்சை யூரியாவாக மாற்றி சிறுநீரகம் வழியே சிறுநீராக வெளியேற்றி விடுகிறது. இதுபோன்ற நடைமுறைச் சுழற்சியில் சிக்கல் ஏதாவது என்றால் இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இதனால் சிறுநீரகம் பாதிப்படையும். தைராய்டு, அட்ரினல் போன்ற நாளமில்லா சுரப்பிகள் சுரப்பதை உடனுக்குடன் தேவையான அளவை மட்டுமே ஏற்றுக்கொண்டு மீதியை அழித்துவிடுவதும் கல்லீரலின் வேலை தான். அமினோ அமிலங்களை கல்லீரல் ஏற்றுக் கொள்ளவும் செய்கிறது. இந்த அமினோ அமிலங்களை உடல் வளர்ச்சிக்கு தேவைப்பட்ட படி உடல் திசுக்களை கூட்டக் கூடிய மூலப் பொருளாகவே மாற்றி அளிக்கிறது. வைரஸ் கிருமிகளால் ஏற்படும் உடல் பாதிப்பை அறிந்து அக்கிருமிகளை வெளியேற்றவும் கல்லீரல் தான் உதவுகிறது. தேவைக்கதிகமான மருந்துகளையும் உடலில் இருந்து வெளியேற்றி திசுக்களை பாதுகாக்கிறது. கல்லீரல் தான் பித்த நீரை சுரக்கும். சுரந்த பித்த நீர் பித்த நீர்ப்பையில் சேமிக்கப்படுகிறது. ஒருவர் மதுவை தொடர்ந்து குடித்து வந்தால் கல்லீரல் மதுவில் இருக்கும் நஞ்சை முறிவு செய்து கொண்டே வரும். மது கல்லீரலை 75% வரை பாதிப்புக்குள்ளாக்கிவிடும். இதனால் கல்லீரலை குணப்படுத்துவது என்பது கடினம். கல்லீரலுக்கு என முக்கிய பணிகள் உண்டு. "

Share
Tweet
Share