image
தாராபுரம் செளதாமினி / 01 February, 2022

ஈறுகளில் இரத்தக்கசிவை எப்படி சரிசெய்வது?

"பல் போனால் சொல்போச்சு என்பது பழமொழி. பற்களை இழந்தால் சொல்லை மட்டும் இழப்பதில்லை. இளமைத்தோற்றம், முக வசீகரம், விரும்பிய உணவுகளை உண்ணும் சுதந்திரம் எல்லாவற்றையும் இழந்து விடுகிறோம். எனவேபற்களைப் பாதுகாக்க பற்களை தாங்கிப்பிடிக்கும் ஈறுகளை முறையாக பராமரிக்க வேண்டும். ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல்,இரத்தக்கசிவு ஏற்பட்டாமல் பாதுகாக்க வேண்டும். பாக்டீரியாக்களின் வசிப்பிடமான வாயை முறையாக பராமரிக்காமல் இருந்தால் ஈறுகள் பாதிக்கப்படுகிறது. வெடிப்பு ஏற்படுகிறது. இரத்தக்கசிவு உண்டாகிறது. அது மட்டுமல்ல, வைட்டமின் சிமற்றும் வைட்டமின் கே குறைபாடு, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், புகையிலை பழக்கம், சத்தான உணவுகளை தவிர்ப்பது என பல்வேறு காரணங்களால் ஈறுகள் பாதிக்கப்படுகிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு மேஜைக்கரண்டி உப்பு சேர்த்து தினஷீம் இரண்டு முறை வாயைக் கொப்பளித்து வந்தால், ஈறுகளில் உள்ள வீக்கம் குறைந்து,பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வலி குறையும். பற்கள் உறுதியடையும். இரத்தம் வடிவது கட்டுப்படும். சுத்தமான தேனால் ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்யவும். இதிலிருக்கும் ஆன்டி - இன்ஃப்ளமேட்ரி தன்மை ரத்தக் கசிவுக்குக் காரணமான பேக்டீரியாவை அழித்து விடும் . அதனால் தினமும் ஈறுகளில் தேன்தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். எ லு மி ச்சை யில் வை ட் ட மி ன் சி ஏ ரா ள மா க நிறை ந் து ள் ள து . எ னே வ எலு மி ச்சை சா ற் றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து , தினமும் காலை மற்றும் இரவில் பல் துலக்குவதற்கு முன் வாயை க் கொப் பளி க் க நல்ல பலன் கிடைக்கும். வாயிலுள்ள கிருமிகளைஅழிக்க , ஆயில் புல்லிங் மி க ச் சி ற ந் த ஒ ன் று . கொஞ்சம் நல்லெண்ணெயில் வாயில் விட்டு சுமார் இரண்டு நிமிடம்வாய்க்குள்ளேயே வைத்து கொப்பளிக்கவும். ஈறுகளின் பி ரச்சனையை தீ ர்த்து ப ற் கை ள பா து கா ப் ப தி ல் கி ரா ம் பு முக்கிய பொருளாக இருக்கிறது கிராம்புத் தைலத்தை வலியுள்ள இடத்தில் த ட வி னா ல் நி வா ர ண ம் கிடை க் கு ம் . சொத்தை ப் பல்லுக்கும் கிராம்பு தைலத்தை தடவி வந்தால் சொத்தையை ஏற்படுத்தும் புழுக்கள் அ ழி யு ம் . ஈ று க ளி ல் வீக்கம் காணப்பட்டால்அந்த இடத்தில் கிராம்பு தைலத்தை தடவி, சிறிது நே ர ம் மென்மை யா க ம சா ஜ் செய் து , 5 நி மி ட ம் க ழி த் து ,உப்பு நீரில் வாயைக் கொப் பளி த் தா ல் , வீ க் க ம் உ ட னே குறைந்துவிடும். ஒ ருமேை ஜ க் க ர ண் டி க டு குஎண் ணெயை சூடா க் கி அ தி ல் ஒ ரு மேஜைக்கரண்டி உப்பு, அரைக்கரண்டி மஞ்சள் கலந்து , அந்த எண்ணெயை தினமும் காலை மாலை இரண்டு முறை ஈறுகளில் மெதுவாகத் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும்.ஒ ருமேை ஜ க் க ர ண் டி விளக்கெண்ணெயை லேசாக சூடாக்கி, அ ந் த எண் ணெயை இ ர த் த க் க சி வு ஏ ற் படு ம் இட த்தில் காலை மாலை இரண்டுமுறை தடவி மசாஜ் செய்து வந்தால், நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கலாம். மூன்று மேஜைக்கரண்டி பெருஞ்சீரகத்தை (சோம்பு) ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினஷீம் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், ஈ று களி ல் வீ க் க த்தை உண்டா க் கி ய தொற்றுக்கள் அழிக்கப்படும். ஒ ருமேை ஜ க் க ரண் டிபே க் கி ங் சோடாவில், இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீ ர் ஊ ற் றி பேஸட் செய் து , வீக்கமடைந்து ஈறுப்பகுதியில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் வலி மற்றும் வீக்கம் உடனடியாக குறைந்துவிடும். ஈறுகளில் உள்ள வீக்கத்தை இஞ்சி பேஸ்ட் கொண்டும் சரிசெய்யலாம். இஞ்சியை தோல்நீக்கி அதனுடன் இரண்டு கிராம்பு சேர்த்து நன்றாக அரைத்து பாதிக்கப்பட்ட இரத்தில் தடவிவர இதம் கிடைக்கும். நோய்க்கிருமிகள் அடுத்த இடத்துக்கு பரவுவது தடுக்கப்படும். குழந்தைகளுக்கு ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்தால் நல்ல பலனை காணலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயால் ஈறுகளை மசாஜ் செய்தாலும் ஈறுகளின் வீக்கம் குறைந்து நலம் கிடைக்கும்.ஆப்பிள், பேரிக்காய்களை கடித்து சாப்பிடுங்கள். தினமும் இரு வேளை பல் துலக்குங்கள். தயிர், கிரீன் டீ , பூண்டு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது ஈறுகளை பாதுக்காக்க உதவும்."

Share
Tweet
Share